யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் கூரைக்கு மேலேறி சிறைக் கைதி ஒருவர் நேற்று ஆரம்பித்த உண்ணாவிரதப் போராட்டம் இன்றும் தொடர்கிறது.
நேற்று சனிக்கிழமை பகல் வேளையில் ஆரம்பித்த குறித்த நபரின் போராட்டம் இரவிரவாக தொடர்ந்துள்ளது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து வேறு சிறைச்சாலைக்குத் தன்னை மாற்றுமாறு கோரியே குறித்த கைதி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
மாத்தறையைச் சேர்ந்த 41 வயதான புஷ்பகுமார என்பவரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.