எதிர்வரும் சில நாட்களில் அமைச்சரவை அமைச்சர்கள் இருவரின் பதவிகளில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜப்பானுக்கான விஜயத்தை முடித்துக் கொண்டு ஜனாதிபதி தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில், இரண்டு அமைச்சுப் பதவிகளிலும் மிக விரைவில் மாற்றம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் அமைச்சுப் பதவிகளுக்காக காத்திருப்பதாகவும், அவர்களுக்கு இரண்டு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்படவுள்ளதாக அரசியல் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
எவ்வாறாயினும், அந்தப் பதவிகளுக்கு யார் நியமிக்கப்படுவார் என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.