குமார் பொன்னம்பலம் சந்திரிகாவால்தான் சுட்டுக் கொல்லப்பட்டார் ; தர்மலிங்கம் சுரேஸ்

ஆயுதப் போராட்டத்தை நியாயப்படுத்தி சர்வதேச அரங்கிற்கு தனது கருத்துக்களை மிக தெளிவாக கஜேந்திரகுமாரின் தந்தையாரான குமார் பொன்னம்பலம் கூறிவந்தார் இந்த போராட்டம் நியாயப்படுத்தப்பட்டு வந்த சந்தர்ப்பத்தில் சந்திரிக்காவால் வெளிப்படையாக அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் அதற்காக விடுதலைப்புலிகளின் தலைவரால் முதல் முதலாக அவருக்கு மாமனிதர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டது

என தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தனது இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.

தமிழர்களுக்கான மாற்றுத் தலைமை 2010 ஆம் ஆண்டு கஜேந்திரகுமார் தலைமையில் உருவாக்கப்பட்டுவிட்டது எனவே சம்மந்தன் ஐயா தமிழ் தேசிய கூட்டமைப்பை கலைத்துவிட்டு வீட்டுக்கு செல்லவேண்டிய ஒருவர். அவ்வாறே கருணா அம்மான் உண்ட வீட்டுக்கே வஞ்சகம் செய்தவர் அவர் தமிழ் மக்களைப் பெறுத்த மட்டில் செத்த பாம்புதான் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர்

திருகோணமலையில் போட்டியிடும் சம்மந்தன் ஜயா தேற்கடிக்கப்படுவார் அவர் தோற்றால் தேசிய பட்டியலி ல் அவரை நியமித்து நாடாளுமன்ற உறுப்பினராக்க சுமத்திரன் மற்றும் மாவை ஆகியோர் திட்டமிட்டுள்ளனர். எனவும் அவர் தெரிவித்துள்ளார் .

You May Also Like

About the Author: kalaikkathir