லிட்ரோ நிறுவனத்தின் தினசரி விநியோகம் அதிகரிப்பு!

லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் தினசரி விநியோகம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

லிட்ரோ எரிவாயுவின் தொடர்ச்சியான தேவை காரணமாக, தினசரி எரிவாயு விநியோகம் 30,000 லிருந்து 40,000 வரை 10,000 சிலிண்டர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, விநியோகத்தை அதிகரிக்க சபுகஸ்கந்த மாபிம பிரதேசத்தில் புதிய எரிவாயு முனையம் ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply