இலங்கையின் தற்போதைய பொருளாதார சீர்திருத்தங்களில் முன்னேற்றத்தை பாராட்டுவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா தெரிவித்துள்ளார்.
நேற்று காலை நிதி இராஜாங்க அமைச்சிர் ஹெஷான் சேமசிங்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்ததாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகமுரா நேற்று (31) நிதி இராஜாங்க அமைச்சர் செஷான் சேமசிங்கவை சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பில் பொருளாதாரத்தை மீண்டும் வழமைக்கு கொண்டு வருவதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள செயற்பாடுகள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர், அவருக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் இன்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்திக்கவுள்ளார்.