பேருந்து கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்!

அடுத்த மாதம் இடம்பெறும் பேருந்து கட்டண மீளாய்வின் போது பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த இவர், தற்போது டீசல் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், பேருந்து கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மேலும் பொருட்கள், உதிரி பாகங்கள் மற்றும் இதர பொருட்களின் விலைகள் கணக்கிடப்பட்டு, ஜூலை முதலாம் திகதி பேருந்து கட்டணங்கள் திருத்தம் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply