சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டபோதிலும், வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளில் மாற்றம் செய்யமுடியாது என அகில இலங்கை வெதுப்பக உற்பத்தி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் உள்ள வெதுப்பகங்களில் 25 சதவீதமானோரே சமையல் எரிவாயு மூலம் வெதுப்பக உற்பத்திகளை மேற்கொள்கின்றனர் எனவும் ஏனையோர் விறகடுப்பையே பாவிக்கின்றனர் எனத் தெரிவித்த ஜயவர்தன, இதனைக் கருத்தில் கொண்டு, வெதுப்பக உணவு உற்பத்தி பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், சமையல் எரிவாயு விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும், தமது சங்கத்தால், விலைத்திருத்தங்கள் மேற்கொள்ளப்படவில்லை என அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.