பிரார்த்தனைகளுக்கு நன்றி தெரிவித்த திருத்தந்தை பொப் பிரான்சிஸ்

வயிற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர்  திருத்தந்தை பிரான்சிஸ், முதன்முறையாகத் தனது உடல்நலம் குறித்து பிரார்த்தனையில் ஈடுபட்டவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அதில், கடந்த சில நாட்களில் பெறப்பட்ட பிரார்த்தனைகள் மற்றும் என் மீது காட்டிய அன்பு ஆகியவற்றுக்கு நன்றி என நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து, கடந்த புதன்கிழமை வயிற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, திருத்தந்தை ரோமின் ஜெமெல்லி மருத்துவமனையில் நலமுடன் இருப்பதாக வத்திக்கான் செய்திகள் தெரிவிக்கின்றன.

அத்தோடு, வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும் தனது நன்றிகளை திருத்தந்தை தெரிவித்திருந்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply