மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்களாக இருவர் நியமனம்

கலாநிதி ராணி ஜயமக மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோர் மத்திய வங்கியின் நிதிச் சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியலமைப்பு பேரவை சபாநாயகரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் நேற்று பிற்பகல் கூடியது.

முன்னாள் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

தேர்தல் காலத்தில் ஊடகங்களில் பொதுவான சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் ஆராயப்பட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir