பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு ;இன்று முடிவு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த கலந்துரையாடல் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரிமாளிகையில் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பெருந்தோட்ட கைத்தொழில் துறை அமைச்சர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகள், பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்குபற்றவுள்ளனர்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லலை.

கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தேயிலை ஏற்றுமதியாளர்களுக்கு நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது இந்த விடயங்கள் தொடர்பில் இன்று முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது .

You May Also Like

About the Author: kalaikkathir