கையடக்கத் தொலைபேசிகள், அதனுடன் தொடர்புடைய இதர பொருட்களின் விலைகளை 20 வீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சியின் பிரகாரம், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் சமித் செனரத் தெரிவித்தார்.