தென்னாப்பிரிக்காவின் மிகப்பெரிய நகரமான ஜோகன்னஸ்பர்க்கில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2:38 மணிக்கு 5.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஜோகன்னஸ்பர்க்கின் தென்கிழக்கு புறநகரில் உள்ள ஆல்பர்டனில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இறுதியாக தென்னாபிரிக்காவில் 2014 ஆம் ஆண்டு 5.0 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது .