ரஷ்ய தூதுவர் – செந்தில் தொண்டமான் சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.ஸகார்யன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் நேற்றைய தினம் ஆளுநர் செயலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது ரஷ்ய தூதுவர் கிழக்கு மாகாணத்தின் சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்துக்கான ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்து தருவதாக ஆளுநரிடம் ரஷ்ய தூதுவர் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply