ஆசிய விஞ்ஞானி இதழ், கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஆசியாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலைத் தொகுத்து வெளியிட்டு வருகின்றது.
அதில் ஆசியாவில் இருக்கும் மிகச் சிறந்த விஞ்ஞானிகளின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளின் பட்டியலில் இலங்கையை சேர்ந்த விஞ்ஞானிகளும் இடம்பெற்றுள்ளனர்.
குறித்த இதழில், கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சதுரங்க ரணசிங்க, மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஷானி சவிந்த ரணதுங்க, கலாநிதி ஆஷா டிவோஸ், கலாநிதி ரொஹான் பெத்தியகொட மற்றும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.