மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி

2021 – 2023 ஆண்டுக்கான உலக டெஸ்ட் கிரிக்கெட் சம்பியன்ஷிப் இறுதி போட்டியில் தோழ்வியடைந்தமையை தொடர்ந்து உலக டெஸ்ட் சமிபியன்ஷிப் 2023-2025 தொடருக்கான முதல் டெஸ்ட் தொடரை மேற்கிந்திய தீவுகள் உடன் இந்திய அணி ஆரம்பிக்கவுள்ளது.

இதற்காக வரும் ஜூலை 12 ஆம் திகதி முதல் ஒகஸ்ட் 13 ஆம் திகதி வரை இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது.

இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 5 T20 போட்டிகளில் அங்கு விளையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜூலை 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை முதல் டெஸ்ட் போட்டியும், 20-24 ஆம் திகதி வரை இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது.

அதனை தொடர்ந்து ஜூலை 27, 29, ஒகஸ்ட் 1 ஆம் திகதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெறவுள்ளது.

மற்றும் ஒகஸ்ட் 3, 6, 8, 12, 13 ஆகிய திகதிகளில் 5 T20 போட்டிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply