உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று (12) வெளியிட்டிருந்தது.
இதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் 7,595 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தில் இருந்து மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார்.
பிரான்ஸ் ஓபன் போட்டியில் அரை இறுதியில் கார்லஸ் அல்காரசையும், இறுதிசுற்றில் கேஸ்பர் ரூட்டையும் வீழ்த்தி 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றியமையையே ஜோகோவிச் இந்த முன்னேற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கின்றது.
36 வயதான ஜோகோவிச் இந்த ஆண்டில் 3-வது முறையாக முதலிடத்தை ஆக்கிரமித்துள்ளார் எனப்து சுட்டிக்காட்டத்தக்கது.