தனியார் மயமாக்கப்படுமா ரயில் சேவை! அமைச்சர் பந்துல வெளியிட்ட தகவல்

இலங்கை ரயில் சேவை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று அமைச்சரவை தீா்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” புகையிரத திணைக்களம் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் எனவே பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை துறைமுக அதிகாரசபையில் ஏற்பட்ட மாற்றத்தைப் போன்று புகையிரத திணைக்களமும் மறுசீரமைக்கப்பட்டு அதிகாரசபையாக மாற்றப்பட வேண்டும்.

புகையிரத திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றுவதன் மூலம் அதிகாரிகள் சுயாதீனமான தீர்மானங்களை எடுப்பதுடன் பொதுமக்களுக்கு வினைத்திறனான சேவையை வழங்க முடியும் “, எனத் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply