வெலிவேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெடுங்கமுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர்.
மீட்கப்பட்ட சடலத்தில் காயங்கள் காணப்படுவதாகவும், 68 வயது மதிக்கத்தக்க நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் வெலிவேரிய பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் நீதவானின் விசாரணைகளைத் தொடர்ந்து உயிரிழந்தவரின் சடலம் கம்பஹா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
T02