அரசுக்கு செலுத்த வேண்டிய கலால் வரியை செலுத்தாத மதுபான நிலையங்களின் உரிமம் தற்காலிகமாக இரத்து செய்யப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும், கலால் வரி செலுத்தாத பல மதுபான நிலையங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கலால் திணைக்களத்திற்கு கட்ட வேண்டிய கலால் வரியை கட்டத் தவறிய மதுபான நிறுவனங்களுக்கு, உடனடியாக வரி கட்டுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொடர்ந்தும் பணத்தைக் கட்டத் தவறினால், அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களை தற்காலிகமாக இடைநிறுத்த வேண்டியிருக்கும் என கலால் ஆணையாளர் நாயகம் சமன் ஜயசிங்க தெரிவித்தார்.