இறப்பர் உற்பத்தியைப் பாதிக்கும் வகையில், ரிங்ஸ்பாட் நோய் என்னும் நோய் பரவி வருவதாக இறப்பர் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மழை காரணமாகவே இந்த நிலை உருவாகியுள்ளதாக தாவர அறிவியல் மற்றும் நுண்ணுயிரியல் நிறுவனத்தின் தலைவர் சரோஜனி பெர்னாண்டோ கூறுகிறார்.
இதன் காரணமாக, இறப்பர் செடிகளின் இலைகள் உதிர்ந்து, இறப்பர் பால் விளைச்சல் குறைவதாக அவர் மேலும் தெரிவித்தார்.