ஜப்பானில் இதுவரை காலமும் இருந்து வந்த பாலியல் உறவுக்கான சட்டபூர்வ வயதெல்லையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கடந்த 1907 முதல் பாலியல் உறவுக்கான சட்டப்பூர்வ வயது எல்லையாக 13 வயது காணப்பட்டது. இது தற்பொழுது 16 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஜப்பானின் நாடாளுமன்ற ஒப்புதலின் அடிப்பைடையில் குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அந்நாட்டில் பாலியல் குற்றங்களுக்கு எதிராக போராடிவரும் மக்கள் அதற்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.