மட்டக்களப்பு – திருமலையில் விபத்து ; ஒருவர் பலி

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி சேறுவில பகுதியில் மோட்டார் சைக்கிளுடன் லொறி மோதியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சேறுவில – நவ நகர பகுதியைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான ஏ.ஜீ. குணரத்ன (50வயது) உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்த வயோதிபரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் லொறியின் சாரதியை நேற்று மாலை மூதூர் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir