புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழா!

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி அம்பாளுக்கு புனராவர்த்தன அஷ்டபந்தன சமர்ப்பண ஏகோன்ன பஞ்சாசத் (49) குண்டபஷ மஹாயாக, மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று(25) காலை இடம்பெற்றது.

இதற்கான கிரிகைகள் 19.06.2023 இல் இருந்து ஆரம்பமானது.

ஐந்து இராஜகோபுரங்களுடன் 500 தூண்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அழகிய ஆலயமாக புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம் வர்ணிக்கப்படுகின்றது.

புங்குடுதீவிற்கே இந்த ஆலயம் வரலாற்று பெருமை மிக்க ஆலயமாக கருதப்படுகின்றது.

இந்நிலையில் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அம்பாள் ஆலய திருக்குடமுழுக்கு விழா ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இன்று சிறப்பாக இடம்பெற்றது.

மஹா கும்பாபிஷேக காணொளி,

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply