ரஷ்ய அதிபர் புடின் மற்றும் ஆயுதக்குழு வாக்னர் இடையே ஏற்பட்ட மோதல் நிலைமையானது, ரஷ்யப் படைகளுக்கிடையே ஏற்பட்டுள்ள பிளவை வெளிப்படுத்துவதாக உள்ளது என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.
வாக்னரின் திட்டங்கள் தொடர்பில் தாம் அறிந்திருக்கவில்லை எனத் தெரிவித்த பிளிங்கன், ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சினை ரஷ்யாவின் உள் விவகாரம் எனவும் தெரிவித்தார்.
மேலும்,புடினின் தலைமைத்துவத்திற்கு எதிராக வெளிப்படையான சவால் விடுக்கப்பட்டதை தாம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.