கடந்த வாரத்துடன ஒப்பிடுகையில் இன்று (26) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி இன்று (26) வௌியிட்ட நாணய மாற்று விகித அறிக்கையின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 299 ரூபா 83 சத்தமாக பதிவாகியுள்ளது.
அத்துடன், அமெரிக்க டொலரின் விற்பனை விலை 314 ரூபா 92 சதமாகவும் பதிவாகியிருந்தது.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை(23)அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 299 ரூபா 03 சதமாகவும் , விற்பனை விலை 314 ரூபா 36 சதமாகவும் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.