ஹயஸ் – மோட்டார் வாகன விபத்து

கொழும்பு, இரத்மலானை பிரதேசத்தில் மோட்டார் வண்டி மீது ஹயஸ் வாகனம் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

இன்று காலை 8 மணியளவில் குறித் விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தனது வர்த்தக நிறுவனத்திற்கு மனைவியுடன் குறித்த நபர் பயணித்துக்கொண்டிருந்தபோது, எதிரே வந்த ஹயஸ் வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் குறித்த வர்த்தகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு, அவரது மனைவி படுகாயங்களுக்குள்ளாகிய நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர், திருகோணமலையைச் சேர்தவரும் தற்போது இரத்மலானையில் வசிப்பவருமான 44 வயதுடைய பாரதிராஜா முகுந்தன் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில், ஹயஸ் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில், இரத்மலானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply