அமீரகத்தின் அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து

ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.

குடியிருப்பின் ஒரு பகுதியில் பரவிய தீ ஏனைய பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியுள்ளது.

விபத்தையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்களும் சிவில் பாதுகாப்பு படையினரும் தீயணைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு, தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்தையடுத்து, குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறிப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply