ஹொங் கொங்கில் நடைபெற்ற பளு தூக்கும் போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.
ஸ்குவாட் முறையில் 325 கிலோவைத் தூக்கி மூன்றாம் இடத்தைப் பெற்று வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த சற்குணராசா புசாந்தன் என்பவரே இவ்வாறு சாதனை படைத்துள்ளார்
நேற்று இலங்கை நேரப்படி மாலை 4.30 மணியளவில் ஆசியா பசுபிக் ஆபிரிக்கா பளு தூக்கும் போட்டி ஹொங் கொங்கில் நடைபெற்றது.
குறித்த போட்டியில் பங்கேற்று 325 கிலோ பளு தூக்கி சாதனை படைத்துள்ளார்.
இவர் கடந்த வருடம் பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற பளு தூக்கும் போட்டியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இருந்து தனி ஒருவராக கலந்து கொண்டிருந்தார்.
அப்போட்டியில், 25 மாவட்டங்களையும் சேர்ந்த 44 க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த போட்டியில் இவர், மூன்று பிரிவுகளில் நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் வென்று, தங்க பதக்கங்களை சுவீகரித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
