ஆயிரம் ரூபாவை அண்மித்துள்ள பச்சை மிளகாய்!

சந்தையில் இன்று பச்சை மிளகாய் கிலோ ஒன்றின் சில்லறை விலை ஆயிரம் ரூபாவை எட்டியுள்ளதாக பொருளாதார மத்திய நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தைக்காக கொள்வனவு செய்யப்படுகின்ற பச்சை மிளகாயின் அளவு பெருமளவில் குறைந்துள்ளதன் காரணமாகவே பச்சை மிளகாயின் விற்பனை விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாயின் விலை 800 முதல் 900 ரூபா வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த வாரங்களில் ஒருகிலோ பச்சைமிளகாய் 350 முதல் 500 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்ட அதேவேளை தற்போது ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளதுடன் எதிர்வரும் நாட்களில் பச்சை மிளகாயின் விலை மேலும் அதிகரிக்க கூடும் எனவும் வியாபாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply