பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயம் அண்மைக்காலமாக பிரதேச செயலகத்தின் பெறுநர் குழு கட்டுப்பாட்டுக்குள் இருந்து வந்தநிலையில், ஆலய பொறுப்புக்களை கவனிப்பதற்காக புதிய தர்மகர்த்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் அடிப்படையில் சென்ற மாதம் 25 ஆம் திகதி தர்மகத்தா சபைக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், புதிய தர்மகர்த்தா சபை உறுப்பினர்கள் 7 பேர் வெற்றி பெற்றனர்.
அதற்கமைய, இன்று காலை 8.00 மணியளவில் அளவில், நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலகத்தின் பெறுநர் குழுவிடமிருந்து புதிய தர்மகத்தா சபை தலைவர் தம்பிராசா தர்பாகரன் மற்றும் ஏனைய உறுப்பினர்களிடம் வைபவ ரீதியாக அனைத்து பொறுப்புகளும் கையளிக்கப்பட்டது.
