தேயிலையின் விலை குறைப்பு!

ஒரு கிலோ தேயிலையின் சராசரி விலை 1500 ரூபாவாக இருந்தாலும் எதிர்பாராதவிதமாக அது சுமார் 1000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு, தேயிலை வரத்து அதிகரிப்பு மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு என்பன இதற்க்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தேயிலை தொழிலை பராமரிப்பது பெரும் சிக்கலாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது.

 

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply