நேட்டோ கூட்டமைப்பை பலப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஐரோப்பிய நாடுகளுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 9 ஆம் திகதி தொடங்கம் 13 ஆம் திகதி வரையில் அவர் இங்கிலாந்து, லித்துவேனியா, பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
முதலில் லண்டன் செல்லவுள்ள ஜோபைடன், இளவரசர் சார்லஸ் மற்றும் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி, இருதரப்பு உறவுகளையும் பலப்படுத்த திட்டமிட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்பின்னர், லித்துவேனியாவில் 11 ஆம் 12 ஆம் திகதிகளில் நடைபெறும் நேட்டோ வருடாந்திர மாநாட்டில் பங்கேற்று, இறுதியாக பின்லாந்தில் நடைபெறும் அமெரிக்க-நார்டிக் மாநாட்டில் அவர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.