அமெரிக்காவின் மேரிலாந்திலுள்ள பால்டிமோர் நகரில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 28 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிச் சூடானது, நிகழ்வொன்றுக்காக அதிகளவானோர் கூடியிருந்தபோது அமெரிக்க நேரப்படி, கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் தொடர்பான விபரங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.
பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவானோர் 18 வயதிற்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் நோக்கம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை எனவும், இந்த சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரியும் பட்சத்தில் மக்களை முன்வந்து தகவல்களை வழங்குமாறு அமெரிக்கப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.