கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள மான்ட்ரியலில் இருந்து தென்மேற்கே பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி 10 வயது சிறுமி ஒருவர் இறந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த வீதியில் பயணித்துக்கொண்டிருந்த கனரக வாகனம், கட்டுப்பாட்டை இழந்து அருகே பயணித்துக்கொண்டிருந்த கார் மீது மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.
விபத்து,நேற்று உள்ளூர் நேரப்படி பகல் 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில், காரில் பயணித்த 10 வயது சிறுதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர், ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்தினையடுத்து, வீதியின் சில பகுதிகள் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.