வெதுப்பக உற்பத்திகளின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு!

வெதுப்பக உற்பத்திகளின் விலையை குறைக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மின்சார கட்டணம் குறைக்கப்பட்டாலும் வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைக்கப்படாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அச்சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்ட நிலையில், வெதுப்பக உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை.

எனவே தற்போது மின்சார கட்டணங்கள் குறைக்கப்பட்டாலும், வெதுப்பக உற்பத்திகளின் விலைகளைக் குறைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply