அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழுவினர் வெளியிட்ட 2023 ஆம் ஆண்டுக்கான உலக நாடுகளின் சமாதான சுட்டெண் பட்டியலில் இலங்கை 107 ஆவது இடத்தை பெற்றுள்ளது.
163 நாடுகளை உள்ளடக்கிய இந்த பட்டியலில் கடந்த ஆண்டு இதே பட்டியலில் 90 ஆவது இடத்தில் இருந்த இலங்கை இந்த ஆண்டு 2.136 சுட்டெணுடன் 107 ஆவது இடத்தை அடைந்துள்ளது.
இதேவேளை, குறித்த பட்டியலில் ஐஸ்லாந்து முதலிடத்தை பிடித்துள்ள அதே நேரம் ஆப்கானிஸ்தான் இறுதி இடத்தில் இடம்பெற்றுள்ளது.
ஒவ்வொரு நாடுகளின் அரசியல், சமூக, பொருளாதார நிலையை அடிப்படையாகக்கொண்டு குறித்த பட்டியல் தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.