விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரபல நகைச்சுவையாளரான நடாஷா எதிரிசூரியவின் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியால் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பரிசீலனையை அடுத்து, நடாஷா எதிரிசூர்யாவை பிணையில் விடுவிக்குமாறு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் குறித்த பிணை கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்போவதில்லை என தெரிவித்ததையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி குறித்த பிணை உத்தரவை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.