1990கள் மற்றும் 2000 களில் ஆசியாவின் பொப் பாடகி கோகோ லீ, தனது 48 ஆவது வயதில், நேற்று காலமானார்.
ஹாங்காங்கில் பிறந்த லீ, சிறுவயதில் அமெரிக்காவுக்குச் சென்று மாண்டரின் மற்றும் ஆங்கில மொழிகளில் அல்பங்களை வெளியிட்டார்.
டிஸ்னியின் ஹிட் திரைப்படமான முலானின் மாண்டரின் பதிப்பில் முக்கிய கதாபாத்திரத்திற்கு அவர் குரல் கொடுத்தார். மேலும் 2001 ஒஸ்கார் விருதுகளில் க்ரூச்சிங் டைகர், ஹிடன் டிராகன் ஆகியவற்றின் ஒலிப்பதிவில் இருந்து ஒரு பாடலைப் பாடினார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்கொலை முயற்சி செய்த அவர், வைத்தியசாலையில் கோமா நிலையில் இருந்ததாகவும், லீ சில ஆண்டுகளாக மன அழுத்தத்தால் அவதிப்பட்டு வந்ததாகவும் அவரது சகோதரிகள் தெரிவித்தனர்.
