ஆடிப்பிறப்பினை முன்னிட்டு, வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் பனை தென்னை வள அபிவிருத்தித் கூட்டுறவுச் சங்கங்கள் இணைந்து ”தாலமுற்றம்” என்னும் நிகழ்வினை நடாத்த தீர்மானித்துள்ளன.
குறித்த நிகழ்வானது எதிர்வரும் 14, 15,16 ஆம் திகதிகளில், முற்பகல் 9 மணி தொடக்கம் பிற்பகல் 7 மணி வரை நல்லூர் சங்கிலியன் பூங்காவில் நடைபெறவுள்ளது.
குறித்த நிகழ்வில், பனைசார் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சிக்காகவும் , விற்பனைக்காகவும் வைக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வு, வடமாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரும் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளருமாகிய தேவந்தினி பாபு தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் B.S.M சார்ள்ஸ், சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் S.M சமன் பந்துலசேன, வடக்கு மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளர் ரூபினி வரதலிங்கம் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
