வடக்கு கரீபியன் அருகே அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த திங்கட்கிழமை 6.6 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதனால் அப்பகுதியில் சில கட்டிடங்களில் சிறிய அசைவுகள் இனங்காணப்பட்டன.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் ஆன்டிகுவா மற்றும் பார்புடாவிற்கு வடகிழக்கே சுமார் 270 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.
புவேர்ட்டோ ரிக்கோ உட்பட பல தீவுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், உடனடியாக சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.