நாளை முதல் விலை பொட்டாசிய உரத்தின் விலையில் மாற்றம்

ஐம்பது கிலோகிராம் கொண்ட பொட்டாசிய உரத்தின் விலை நாளை முதல் 1000 ரூபாவினால் குறைக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த ஆண்டு பருவத்தின் தொடக்கத்தில் 22,000 ரூபாவுக்கு மேல் இருந்த பொட்டாசிய உரத்தின் விலை, 19,500 ரூபாவாக அரசால் குறைக்கப்பட்டது. அத்துடன், யால பருவத்தின் ஆரம்பத்திலேயே உரத்தின் விலையை 4500 ரூபாவால் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இதன்படி, கமநல சேவை நிலையங்கள் ஊடாக தற்போது 15,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் ஒரு மூட்டை பொட்டாசிய உரத்தின் விலை நாளை முதல் 14,000 ரூபாவாக குறைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு நாளை முதல் புதிய விலையில் கமநல சேவை நிலையங்களில் இருந்து பொட்டாசிய உரத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply