இலங்கையர்களுக்கு ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் விடுத்த அறிவிப்பு

டுபாய் மற்றும் அபுதாபியில் பணிபுரியும் இலங்கையர்கள்  காலாவதியான கடவுச்சீட்டுகளுடன் குறித்த நாடுகளில் தங்கியிருக்கிறார்கள் எனவும் அவற்றை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் எனவும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் உதய இந்திரரத்ன தெரிவித்துள்ளார்.
காலாவதியான கடவுச்சீட்டு காரணமாக இலங்கை வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பாதிப்புக்குள்ளாவதுடன், டுபாய் மற்றும் அபுதாபியில் தங்கியுள்ள அவர்களது குடும்பங்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்த அவர், ஏற்கனவே காலாவதியான சுமார் 5,000 கடவுச்சீட்டுகளின் கோரிக்கைகள் தூதரகத்திற்கு கிடைத்துள்ளதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பாக இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட போதிலும் அதற்கான நடவடிக்கை இன்னமும்  மேற்கொள்ளப்படவில்லை என அவர் குற்றஞ் சாட்டினார்.

இலங்கைக்கு பெருமளவிலான அந்நியச் செலாவணிக்கு பங்களிக்கும் இவர்களுக்கு உடனடி சேவையை வழங்குமாறும் தூதுவர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் மேலும் கோரிக்கை விடுத்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply