முதல் நாள் முடிவில் இலங்கை அணிக்கு 242 ஓட்டங்கள்!

பாகிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று (16) காலி மைதானத்தில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணித்தலைவர் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 242 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் தனஞ்சய டி சில்வா 94 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

அத்துடன், அணிக்காக அஞ்சலோ மெத்யூஸ் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் சஹீன் அப்ரிடி 63 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply