உலகளவில் நான்காவது அதிக பாதிப்புக்கள் ஏற்பட்ட நாடான ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்து 611 புதிய நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 6 இலட்சத்து 87 ஆயிரத்து 862 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் 135 பேர் ஒரே இரவில் இறந்துள்ளதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு, அங்கு இதுவரை 10 ஆயிரத்து 296 பேர் இறந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்குப் பின்னால் மூன்றாவது அதிக எண்ணிக்கையிலான தொற்று நோயாளிகளை கொண்ட நாடாக இந்தியா வார இறுதியில் ரஷ்யாவை முந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.