அமெரிக்காவின் கலிபோர்ணியாவில் தனது தம்பியை அண்ணன் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
துப்பாக்கி சூட்டை மேற்கொண்டவர் 3 வயது நிரம்பிய ஆண் குழந்தை எனவும், துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர் ஒரு வயது நிரம்பிய ஆண் குழந்தை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை அமெரிக்க பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.