பாதாள உலக மன்னன் ‘உரு ஜுவா’வின் நெருங்கிய தோழர் கைது

பாதாள உலக மன்னன் ‘உரு ஜுவா’வின் நெருங்கிய தோழர் என நம்பப்படும் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் நேற்று இரவு ஹங்வெல்ல தித்தெனிய பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர், ‘குடல்ல’ என அழைக்கப்படும், தெடிகமுவ – பதுவத்தை பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், தித்தெனியவில் வாடகை வீட்டில் தங்கியிருந்த போது, ஹங்வெல்ல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி, சந்தேகநபரிடமிருந்து 10 கிராம் ஐஸ் போதைப்பொருள், சிம் கார்டுகள், கையடக்கத் தொலைபேசிகள், சிறிய எடையுள்ள தாள்கள், ஒன்பது ATM அட்டைகள் மற்றும் கூரிய ஆயுதங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரை, அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply