அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள டென்னசி ஆற்றில், எரிபொருளை ஏற்றிக்கொண்டு சென்ற இழுவை படகு கவிழ்ந்ததில், சுமார் 18 ஆயிரம் லீற்றர் டீசல் ஆற்றில் கொட்டியது.
இதனால், மெக்ஃபார்லேண்ட் பூங்காவைச் சுற்றியுள்ள கரையோர பகுதிகளில் டீசல் மிதக்கும் நிலையில், பொதுமக்கள் அப்பகுதிகளுக்கு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைப்பதற்காக, ஆற்றில் கசிந்த டீசலை அகற்றும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, படகு மூழ்கியதற்கான காரணம் குறித்த விசாரணைகளை அமெரிக்க பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.