மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை!

இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் உயர்வுஏற்பட்டுள்ளதாக உள்ளூர் தங்க வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக சந்தையில் தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று 25 அமெரிக்க டொலர்கள் அதிகரித்து 1,977 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை 154,500 ரூபாவாக இருந்த 22 கரட் தங்கத்தின் விலை இன்று 157,250 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை 167,000 ரூபாவாக இருந்த 24 காரட் தங்கத்தின் விலை இன்று 170,000 ரூபாவாக அதிகரித்துள்ளது

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply