ரெலிகொம் நிறுவன தலைவர் பதவியிலிருந்து தம்மை நீக்கியிருப்பதாக ரெலிகொம் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளதோடு இவ்வாறு தன்னை நீக்கியவர்கள் பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் எனவும் கூறியுள்ளார்.
இதேவேளை, ரெலிகொம் நிறுவனத்தின் புதிய தலைவராக ரெயாஸ் மிஹிலார் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரெலிகொம் நிறுவனத்தை லைக்கா நிறுவனத்திற்கு விற்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இம் மாற்றங்கள் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.