தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பு உச்சி மாநாட்டில் ரஷ்ய அதிபர் புடின் காணொளி வாயிலாக உரை நிகழ்த்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், பிரிக்ஸ் மாநாட்டில் ரஷ்யாவை பிரதிநிதித்துவப்படுத்தி அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் செர்கய் லாவ்ரோ நேரடியாக பங்கேற்பார் எனவும் ரஷ்யா அறிவித்துள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பு என்பது பிரித்தானியா, இந்தியா, சீனா, ரஷ்யா தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகும்.
இதன் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க் நகரில் எதிர்வரும் ஆகஸ்ட் 22 முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.